"விசுவாசிகள் அன்பில் நடந்து கொள்ளுங்கள்" என்று பவுல் எபேசு விசுவாசிகளுக்கு எபேசியர் நிருபத்தில் எழுதுகிறார்.
" எபேசு" என்றால் " விரும்பப்பட்டது" என்று பொருள்.
எழுதப்பட்ட காலம் : சுமார் கி.பி 61-62.
( இந்த நிருபம் எபேசு சபையாருக்கு மட்டும் எழுதப்பட்டதல்ல. சின்ன ஆசியாவிலுள்ள அனைத்து சபைகளுக்கும் எழுதப்பட்டது)
நோக்கம்: விசுவாசிகள் விசுவாசத்தில் பலப்படுவதற்கு... ( எபேசியர் 3:16-19 )
இந்த ஆறு அதிகாரத்தில்,
- எபேசியர் 1-3 அதிகாரங்கள் - விசுவாசிகளின் பதவி நிலையை பற்றி கூறுகிறது.
- எபேசியர் 4-6 அதிகாரங்கள் - விசுவாசிகளின் நடக்கையை பற்றி கூறுகிறது.
- சபை நிலையில் ( 4 ஆம் அதிகாரம் )
- ஒழுக்க நிலையில் ( 5:1-20 )
- சமூக நிலையில் ( 5: 21 to 6: 9 )
- போராட்ட நிலையில் ( 6:10 to 6:24 )
ஒழுக்க நிலையில் விசுவாசிகள்,
- அன்பில் நடக்க வேண்டும் ( எபேசியர் 5:2 )
- ஒளியில் நடக்க வேண்டும் ( எபேசியர் 5:8 )
- கவனமாக நடக்க வேண்டும் ( எபேசியர் 5:15,16 )
எபேசியர் 5:2 - அன்பிலே நடந்து கொள்ளுங்கள்....
எப்படிப்பட்ட அன்பில் நடக்க வேண்டும்?
" கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்தது போல"...
அப்படி என்றால் அந்த அன்பு ஜீவனையை கொடுக்க கூடிய அன்பாகும். அப்படிப்பட்ட அன்பில் தான் நாம் நடக்க வேண்டும் என்று பவுல் இங்கே கூறுகிறார்.
- " அன்பு " என்றால் என்ன?
இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். " அன்பு " என்ற பதத்துக்கு பொதுவான இலக்கியத்தில் அநேக பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது "நேசம்" , "பாசம்" , "காதல்" , "பரிவு" என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் வேதம் என்ன சொல்கிறது?
2 யோவான் 1:6 - அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே " அன்பு ".
அப்படி என்றால் நாம் அன்பில் நடக்க வேண்டுமானால் முதலாவது அவருடைய கற்பனைகளின் நடக்க வேண்டும். ஏனென்றால் இந்த கற்பனைகள் மட்டும் தான் சத்தியமானவை, உண்மையுள்ளவை,மாறாதவை. இது ஆதிமுதல் உண்டானது.
அப்படிஎன்றால் இந்த கற்பனை மிகவும் கடினமானதா?
இல்லவே இல்லை ( 1 யோவான் 5:3 ).
அப்படிஎன்றால் இந்த கற்பனை மிகவும் கடினமானதா?
இல்லவே இல்லை ( 1 யோவான் 5:3 ).
- யாரிடத்தில் அன்பு கூறவேண்டும்?
உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் என்று வாசிக்கிறோம்.ஆகவே நாம் முதலாவது தேவனிடத்தில் அன்பு கூறவேண்டும். ஏனென்றால் நாம் முந்தி அவரிடத்தில் அன்பு கூறவில்லை. மாறாக அவர் நம்மை உலக தோற்றத்துக்கு முன்னமே தெரிந்துகொண்டு நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார். அதே அன்பை தேவன் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிறார். அதுவும் வெறுமையான அன்புடன் அல்ல... மாறாக முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்பு கூறவேண்டும் என்று விரும்புகிறார்.
2.தன் சகோதரனிடத்தில்... ( 1 யோவான் 4:21)
நாம் தேவனிடத்தில் அன்பு கூறவேண்டும் என்று முதலாவது பார்த்தோம். அப்படி தேவனிடத்தில் அன்பு கூறுகிறவன் தான் சகோதரனிடத்திலும் அன்பு கூறவேண்டும் என்று இங்கே நமக்கு போதிக்கிறது. இந்த கற்பனையை தேவனாலே பெற்றிருக்கிறோம். ஆகவே தான் சகோதரனிடத்திலும் கிறிஸ்து நம்மிடத்தில் அன்பு கூர்ந்ததுபோல நாம் நம்முடைய சகோதர்களிடத்திலும் அன்பு கூறுவோம். ( 1 யோவான் 5:2 ).
3. பிறனிடத்தில்... ( மத்தேயு 19:19 )
நாம் தேவனிடத்திலும், தன் சகோதரனிடத்திலும் அன்பு கூறுவோமானால், நீ உன்னை நேசிக்கிறதுபோல, பிறனிடத்திலும் அன்பு கூறவேண்டும் என்று இங்கு கூறுகிறது. ( 1 யோவான் 5:1 ). அப்பொழுதுதான் இவர்கள் நாம் அவர்களிடத்தில் காட்டுகிற கிறிஸ்துவின் அன்பினாலே இவர்களும் இந்த அன்பை பெற்றுக்கொள்ள முடியும்.
- எப்படி அன்பு கூறவேண்டும்?
1 யோவான் 3:18 - கிரியையினாலும்,உண்மையினாலும் அன்பு கூறவேண்டும்.
ஆம், நாம் செலுத்துகிற அன்பானது கிரியையுள்ளதாயும் அது உண்மையையும் காணப்படவேண்டும்.
- அன்பில் நடந்து கொண்டதின் பிரதிபலன்கள்:-
- அவருடைய சீஷர்களென்று உலகம் அறிந்துகொள்ளும் ( யோவான் 13:35 ).
- தேவன் நமக்குள் நிலைத்திருப்பார் ( 1 யோவான் 4:12 ).
- தீராத பாவங்களை மூடும் ( 1 பேதுரு 4:8 ).
- பயத்தை புறம்பே தள்ளும் ( 1 யோவான் 4:18 )
- சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் ( ரோமர் 8:28 ).
- இந்த அன்பு இல்லையென்றால்?
.... அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
.... அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
.... அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment