Tuesday, May 4, 2010

புதுப்பிக்கப்படுதல்

1. அழைப்பு புதுபிக்கப்பட்டது:-

                         - ஆபிரகாமின் முதல் அழைப்பு ஊர் என்ற பட்டணத்திலிருந்து...  அப்போ 7:2-3, ஆதி 11:31.

                        -  புதுபிக்கப்பட்டது ஆரானில்... ஆதி 12:1.

" எல்லாமே  தோல்வியடைந்தாலும் கர்த்தருடைய அழைப்பு புதுபெலத்தையும், விழுந்துபோன நிலையிலிருந்து எழுவதற்கு உதவிசெய்கிறது".
இதுபோலவே விசுவாசிகளாகிய நம்மையும் விசுவாசத்தின் மூலமாய் அழைத்துள்ளார். எதற்காக அழைத்தார்:-
  •  1 தீமோ 6:12 - நித்தியஜீவனை பெற்றுகொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.
  •  கொலே 3:15 - சமாதானத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
  •  1 கொரி 1:2 - பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஆபிரகாம் நதிக்கு அப்புறத்தில் நன்னார் ( நிலா ) என்கிற விக்கரகத்தை வணங்கினவனை கர்த்தர் அழைத்தார். இரட்சிப்பின் தேவனே கிருபையாக நம்மை அழைத்துள்ளார். நாம் அவரை தெரிந்துகொள்ளவில்லை, அவரே நம்மை தெரிந்துகொண்டார். யோவா 15:16.
தேவன் நம்மை எதற்காக  ( பதவிக்கு அல்லது குறிப்பிட்ட பணியை செய்ய ) அழைத்தாரோ அதை செய்வதுதான் ஆண்டவருக்கு மகிழ்ச்சி. 1 கொரி 7:17,20.

2. உடன்படிக்கை  புதுபிக்கப்பட்டது:-

                           உடன்படிக்கை என்றால், இருவர் இணைந்து ஒரு குறிப்பிட்ட பணியை செய்வதற்காக, உறவில் நிலைத்திருக்கும்படியாக தன்னை அர்ப்பணித்து கொள்வது.
          தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து எந்தவித நிபந்தனையும், எதிபார்ப்பும் இல்லாமல் ஆசீர்வதிப்பத்தாக வாக்கு கொடுத்தார். ஆதி 12:1-3; 5:7-21.
 உடன்படிக்கை இரத்தத்தின் மூலம் முத்திரிக்கப்படுகிறது. இரட்சிப்பு கூட இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டு, அது நிறைவேற்ற தேவனே தன்னை அர்ப்பணித்துள்ளார். இயேசு கிறிஸ்துவையே நமக்காக கொடுத்த தேவன், நமக்கு வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றுவார். - ரோமர் 8:32.
தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை, அவருடைய சந்ததியான இஸ்ரவேல் ஜனங்களோடு செய்து  உடன்படிக்கை புதுப்பித்தார். ( யாத் 19,  உபா 1-29).
யோசுவாவின் முன்னிலையில் உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. (யோசுவா 24 அதிகாரம்).

3. ஒப்படைப்பு ( Commitment ) புதுப்பிக்கப்பட்டது:-

             யாக்கோபு ஏசாவுக்கு பயந்து பதான் அராமுக்கு தன்னுடைய மாமா வீட்டுக்கு போகும்போது பெத்தேலில் தேவன் தரிசனமாகி உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார்.
அப்பொழுது யாக்கோபு தேவனோடு பொருத்தனை பண்ணிக்கொண்டான் - ஆதி 28:1-22.
ஆனால் அந்த தரிசனம் ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கை எல்லாவற்றை உலகத்தின் ஆசீர்வாதத்தின் நாட்டம் அதை மங்கச் செய்தது. ஆனால் தேவன் மீண்டும் தரிசனமாகி நீ எனக்கு செய்த பொருத்தனையை புதுப்பித்துகொள் என்றார். ஆதி 35:1.
யாக்கோபு எழுந்து தன்னை சுத்திகரித்துகொண்டு பெத்தேலுக்கு சென்று தேவனோடு செய்த பொருத்தனையை புதுப்பித்து கொண்டான். ஆதி 35:1-4.

4. அன்பு புதுப்பிக்கப்பட்டது:-  

 இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது வனாந்திரத்திலே தேவன் மீது அளவுக்கதிகமான அன்பு, பக்தி காணப்பட்டது. எரேமி 2:2. நாட்கள் செல்ல செல்ல தேவனை மறந்து விக்கிரகங்களின் பின்னாக சென்றார்கள்.
ஆதியிலே அவர்கள் கொண்டிருந்த அதே அன்பை தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அன்பு இப்பொழுது இல்லை. அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டுவர வன்னந்திரத்துக்கு நயங்காட்டி அழைத்து செல்வார். யாரும் அங்கு இருக்கமாட்டார்கள். கைவிடப்பட்ட, ஆதரவற்ற நிலை காணப்படும். அப்பொழுது அவர்களுடைய இருதயத்தோடு கனிவான, மென்மையான வாத்தைகளை கொண்டு பேசுவார், ஆசீர்வாதத்தை கொடுப்பார். ஓசியா 2:13-15.
         தேவன்மேல் நம்முடைய அன்பு எப்படி காணாப்படுகிறது?
1 கொரி 16:22 - ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூறாமல் போனால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான்.

5. எச்சரிப்பு புதுப்பிக்கப்பட்டது:-

                     எபிரெயர் நிருபத்தில் 6 முறை எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது.
  1. கேட்டவைகளை விட்டு விலகாதபடி ஜாக்கிரதையாய் கவனிக்க வேண்டும். எபி 2:1-4.
  2. பரிசுத்த ஆவியானவரின் சத்தியத்திற்கு எதிராக இருதயத்தை கடினப்படுத்த கூடாது. எபி 3:7-14.
  3. சத்தியத்தை மறுதலிக்க கூடாது. எபி 5:11-6:20.
  4. சத்தியத்தை அறிந்து மனப்பூர்வமாய் பாவம் செய்தால் நியாயத்தீர்ப்பு வரும். எபி 10:26-39.
  5. தேவனுடைய கிருபையை குறைத்து மதிப்பிடக்கூடாது. எபி 12:15-17.
  6. பேசுகிறவருக்கு நீங்கள் செவி கொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். எபி 12:25-29.
சகோ. எலியாதுறை. (ICCFC,Salem )
சாலேம் சகோதர சபை,சேலம்.
 
  

No comments:

Post a Comment